புதுடெல்லி: ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை வருகிறார். அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. ஏராளமான மீனவர்கள் மீட்கப்படாத நிலையில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் பார்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளையும், மீனவ மக்களையும், விவசாயிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதே போல் மேலும் பல்வேறு கட்சி தலைவர்கள் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரி வர உள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிடுகிறார். நாளை காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அதனை தொடர்ந்து அங்கிருந்து தூத்தூர் வழியாக சின்னத்துறை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தூத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து கடலோர கிராமங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முன்னதாக கேரள மாநிலத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட உள்ளார். விவசாய பகுதிகளை ராகுல்காந்தி பார்வையிடுவது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு முதல்முறையாக ராகுல்காந்தி நாளை தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
More like this
பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...
தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!
தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...