Home » அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : நூலிழையில் மிஸ் ஆன AFFA – ன் அரையிறுதி!!

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : நூலிழையில் மிஸ் ஆன AFFA – ன் அரையிறுதி!!

0 comment

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோஷியேஷன் (AFFA) நடத்தும் 20 ம் ஆண்டும் தென்னிந்திய அளவிளான மாபெரும் மின்னொளி கால்பந்து தொடர் போட்டி கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாக் – அவுட் முறையில் நடைபெற்று வந்த லீக் சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்த்க நிலையில் இன்று காலிறுதி போட்டிகள் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில் அதிரை AFFA – CCK காரைக்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.

அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் தனது சொந்த மைதானத்தில் அதிரை ரசிகர்களின் கர ஒலிகளுக்கு மத்தியில் களம் கண்ட அதிரை AFFA அணி மிக நேர்த்தியான முறையில் விளையாடியது.

இரண்டு பகுதி நேர ஆட்டத்திலும் அதிரை AFFA அணி ஆட்டத்தை தன்வசம் வைத்திருந்த போதிலும் AFFA அடித்த அனைத்து ஷூட்களும் கோல் கம்பம் அருகே நலுவி சென்றது ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சிவசத்திற்குள்ளாகியது.

எனினும், இரு அணிகளும் இறுதி வரை கோல் ஏதும் போடாததால் ஆட்டம் சமநிலையடைந்ததால் போட்டி டை – பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் காரைக்கால் அணி 4 – 3 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter