Home » அதிரை எக்ஸ்பிரஸ் பரிசளிப்பு நிகழ்ச்சி தேதி அறிவிப்பு! பெண்கள் தொழுகை நடத்த தனி இடவசதி!! திரளாக பங்கேற்க அழைப்பு!!!

அதிரை எக்ஸ்பிரஸ் பரிசளிப்பு நிகழ்ச்சி தேதி அறிவிப்பு! பெண்கள் தொழுகை நடத்த தனி இடவசதி!! திரளாக பங்கேற்க அழைப்பு!!!

by அதிரை இடி
0 comment

கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்கள் உட்பட 377 பேருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட உள்ளன.

இதனிடையே போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தோருக்கு வழங்குவதற்கான தங்கம், வெள்ளி நாணயங்களை அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபர்களான ஹாஜா முகைதீன், பாய்ஸ் அகமது ஆகியோரிடம் பட்டுக்கோட்டை நவரத்னா நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். முன்னதாக 374 பேருக்கான ஊக்க பரிசுகளை டெரிவியர் ஆடையகம் கையளித்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிரை புதுமனை தெருவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் ரமலான் போட்டியின் பரிசளிப்பு, சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்குதல் மற்றும் அதிரை எக்ஸ்பிரசின் 16ம் ஆண்டு துவக்க விழா நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருப்பதுடன் மகரிப் தொழுகையை நிறைவேற்ற அருகில் உள்ள பெண்கள் மதரஸாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் M.H.முஹம்மது இப்ராஹீப் தாவூதி தலைமையில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில் கடற்கரை தெரு ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் M.G.சஃபியுல்லாஹ் அன்வாரி சிறப்புரை நிகழ்த்துகிறார். இதில் பரிசுக்கு தேர்வானவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமாய் அதிரையர்களின் இணையத்துடிப்பான அதிரை எக்ஸ்பிரஸ் அழைப்புவிடுத்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter