அதிரையில் கடந்த 30 ஆண்டுகளாக வசதியற்ற மக்களுக்கு பல்வேறு உதவிகளை அதிரை பைத்துல்மால் தொடர்ந்து செய்து வருகிறது. இச்சேவையில் முதன்மையாக இருப்பது வட்டியில்லா நகைக் கடன். இந்த வட்டியில்லா நகைக் கடனை அதிரையர்கள் பெரும்பாலானோர் உபயோகித்து வந்த நிலையில், A.ஹாஜா சரீப் என்கிற நபர் தனியார் நிதி நிறுவனங்களிடம் கந்து வட்டிக்கு கொடுத்து ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்புடைய நகை மற்றும் பண மோசடியை செய்துள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து அதிரை பைத்துல்மால், மூத்த குற்றவியல் வழக்கறிஞர் உதவியுடன் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் 16.08.2022 அன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிரை பைத்துல்மால் பற்றியும் இந்த மோசடியை பற்றியும் தவறான தகவல்களை, அவதூறுகளை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் எனவும், இது குறித்த சந்தேகங்கள், கேள்விகளுக்கு அதிரை பைத்துல்மால் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விளக்கத்தை கேட்டுப் பெறலாம் என ABM கூறியுள்ளது.