Home » தக்வாபள்ளி நில ஆக்கிரமிப்பாளர்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – டிரிபியூனல் நீதிமன்றம்.-

தக்வாபள்ளி நில ஆக்கிரமிப்பாளர்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – டிரிபியூனல் நீதிமன்றம்.-

by
0 comment

அதிரை துலுக்கா பள்ளி ட்ரஸ்ட்டுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமம் செய்து உரிமை கொண்டாடி வரும் நபர்களுக்கு சமீபத்திய வக்பு நடவடிக்கைகள் பேரிடியாக அமைந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

இதேபோல் தமிழகம் தழுவிய அளவில் வக்பு நில மீட்பில் முழுமையாக அக்கரை செலுத்தி வருகிறது தமிழ்நாடு வக்பு வாரியம்.

அதன்படி அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிக்கு சொந்தமான வக்பு நிலங்களை சிலர் உரிமை கோரி வந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக வழக்குகள் நடைபெற்றது.

இதனை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கக் ஒன்றுகூடி மேல் முறையீட்டுக்கு சென்றனர் அதனடிப்படையில் இன்று டிரிபியூன் நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் இன்று ஆஜராக நோட்டீஸ் வழங்கிய நிலையில் ஆக்கிரமிப்பாளர்களில் சிலர் ஆஜராக வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கை வருகின்ற நவம்பர் மாதம் 1ஆம் தேதி அனைவரும் ஆஜராக வேண்டும் என கண்டிப்புடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்னர் டிரிபியூன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதில், சொந்தமாக பத்திரம் பட்டா சிட்டா உள்ளிட்ட எதுவாகிலும் செல்லுபடி ஆகாது என்றும் தாங்கள் உரிமை கோரி வரும் இடங்கள் அனைத்தும் துலுக்கா பள்ளி ட்ரஸ்ட்டுக்கு சொந்தமான இடம் என்றும் அதற்கான ஆதாரபூர்வமான நகலை வெளியிட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது வக்பு வாரியம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter