தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான விளக்க பொதுக்கூட்டங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. அதன் ஒரு அங்கமாக திமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டையில் இந்தி திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை எதிரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர் SRN. செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தலைமை கழக பேச்சாளர்கள் தா.பளூர் இளஞ்செழியன், ந. மணிமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இப்பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சுப. சேகர், மாவட்ட பொருளாளர் S.H. அஸ்லம், மாவட்ட துணை செயலாளர்கள் பொன். சத்தியமூர்த்தி, ஞா. மைக்கேலம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினர் பழஞ்சூர் செல்வம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.














