தமிழகத்தில் 12 மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.இதனால் தொழிலாளர்கள், சாலை மற்றும் நடைமேடைகளில் கடை அமைப்பவர்கள், மாணவர்கள், வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்பவர்கள், மீனவர்கள் ஆகியோர் அதிகமாக பயன்பெறுவர்.
கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு, முகவரிக்கான தகவல்களை மட்டும் அளித்து எளிதாக கேஸ் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதனால் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவது வெகுவாக குறையும் என்றார்.
