77
தஞ்சாவூர்சுற்று வட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 38 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் நகர் பகுதிகளில் சமீப நாட்களாக இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போயின. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், குற்றவாளிகளை பிடிக்க தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிபிரியா உத்தரவின் பேரில், டவுன் டிஎஸ்பி ராஜா தலைமையில், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்கமல் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வாகன திருட்டு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.