தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயிலும் தேசிய மாணவர் படை, தேசிய பசுமைப் படை,நாட்டு நலப் பணித்திட்டம்,ஜூனியர் ரெட் கிராஸ்,சாரணர் படை,போன்ற அமைப்புகளில் இருக்கும் மாணவர்களுக்கும்,மற்றும் இதர மாணவ,மாணவிகளுக்கும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் திடக்கல்வி மேலாண்மை,வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைத்தல்,பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பற்றியான பயிற்சி வரும் 2.1.2018 முதல் பள்ளி பாடத்திட்டங்கள் பாதிக்காத வகையில் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியை பேரூராட்சி அலுவலர்கள்,பட்டுக்கோட்டை ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களை கொண்டு நடத்தப்படுகிறது.
அதிரையை சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளிலும் நடத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 அமைப்பு அனுமதி கேட்டுள்ளனர்.