அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஜூனியர் 7s FC தஞ்சாவூர் அணியினரும் கௌதியா 7s நாகூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் ஜூனியர் 7s FC தஞ்சாவூர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கௌதியா 7s நாகூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்றைய தினம்(15/06/2023) ஆட வேண்டிய அணிகள் :
வல்லவன் 7s கரம்பயம் vs மன்சூர் FC திட்டச்சேரி
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்