அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் வல்லவன் 7s கரம்பயம் அணியினரும் மன்சூர் FC திட்டச்சேரி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் மன்சூர் FC திட்டச்சேரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வல்லவன் 7s கரம்பயம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய தினம்(16/06/2023) ஆட வேண்டிய அணிகள் :
கலைவாணர் 7s கண்டனூர் vs கான்ஃபிடன்ட் 7s தஞ்சாவூர்
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்