அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
தொடரின் பதினொன்றாம் நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டமாக ராயல் FC அதிரை அணியினரும் மன்சூர் FC திட்டச்சேரி அணியினரும் மோதினர். ஆரம்பம் முதலே தாக்குதலை தொடங்கிய ராயல் FC அதிரை அணி அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தியது. இதனையடுத்து முழு நேர ஆட்ட முடிவில் ராயல் FC அதிரை அணி 6-1 என்ற கோல் கணக்கில் மன்சூர் FC திட்டச்சேரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் ESC அதிரை அணியினரும் BLUES FC வேலங்குடி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தாட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது ESC அதிரை அணி. இதையடுத்து முழு நேர ஆட்ட முடிவில் ESC அதிரை அணி, 6-1 என்ற கோல் கணக்கில் BLUES FC வேலங்குடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய தினம்(26/06/2023) விளையாட வேண்டிய அணிகள் :
கேரளா பாய்ஸ் கரம்பயம் vs P.F.A. பட்டுக்கோட்டை
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்












