
திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும் வர்த்தக அணி மாநில துணை தலைவர், எவர் கோல்டு நிறுவன நிர்வாக இயக்குநருமான பழஞ்சூர் K.செல்வத்தின் புதிய திருமண மஹால் மழவேனிற்காட்டில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 10.30மணிக்கு நடைபெற உள்ள இந்த திருமண மண்டபத்தின் திறப்பு விழாவில் திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை, எம்.பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த திறப்பு விழாவில் அதிரையர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்புவிடுத்திருக்கும் பழஞ்சூர் K.செல்வம், அனைவரின் வருகையையும் எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
