அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
இதில் இன்று(05/07/2023) நடைபெற்ற பத்தொன்பதாம் நாள் ஆட்டத்தில் ESC அதிராம்பட்டினம் அணியினரும் மனச்சை 7s மனச்சை அணியினரும் மோதினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ESC அதிராம்பட்டினம் அணி கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோலாக மாற்றியது. மனச்சை அணியின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ESC அதிராம்பட்டினம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மனச்சை 7s மனச்சை அணியை வீழ்த்தி வேற்று பெற்றது.
நாளையதினம்(06/07/2023 விளையாட வேண்டிய அணிகள் :
தென்னரசு FC பள்ளத்தூர் vs ஜூனியர் FC தஞ்சாவூர்
இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்



