77
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழைக் காலங்களில் கடலில் இருந்து கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றின் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் பகுதியளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.