Home » அதிரை : பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) போராட்டம் வெற்றி – கோப்புகளில் கையெழுத்திட்டார் வக்பு கண்கானிப்பாளர் !(படங்கள்)

அதிரை : பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (AUT) போராட்டம் வெற்றி – கோப்புகளில் கையெழுத்திட்டார் வக்பு கண்கானிப்பாளர் !(படங்கள்)

by Admin
0 comment

அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு உதவிப்பெறும் கல்லூரியாகும் இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்துடன் (AUT) இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் வக்ப் வாரியத்தால் நியமிக்கப்பட்டு நிர்வாகியாக இருந்த முன்னாள் தஞ்சாவூர் வக்ப் கண்காணிப்பாளர் ஹைதர் அலி அவர்கள் ஊதியம் உள்ளிட்ட அனைத்து பணிமேம்பாட்டுக் கோப்புகளிலும் கையொப்பமிட்டுள்ளார். அவர் மாற்றலாகி சென்றதால் தஞ்சாவூருக்கு வக்ப் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட தாரீக் என்பரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி இருந்து வருவதால் ஊதியம் உள்ளிட்ட நிர்வாக செலவீனங்களுக்கு கண்கானிப்பாளரின் ஒப்பம் அவசியமாகிறது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் பலமுறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

எந்த கோப்புகளிலும் கையெழுத்திடால் வேண்டுமென்றே தாதமதித்ததாக தெரிகிறது.

இது குறித்து கடந்த 4 ஆம் தேதி AUT அமைப்பினர் போராட்டம் நடத்துவதாக கடிதம் கொடுத்து காவல்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டம் ஒத்திவைக்கப் பட்டதாகவும் தெரிகிறது.

கல்லூரிக் கல்விக்குழுவும் நேரிடையாக சந்தித்து இதுகுறித்து வேண்டுகோள் வைத்தும் அதையும் புறக்கணித்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஊதியம் மற்றும் நிலுவை தொகைகளுக்கான கோப்புகளில் கையொப்பம் இடாத தஞ்சை வக்பு வாரிய கண்கானிப்பாளரை கண்டித்து கா.மு கல்லூரி வளாகத்தில் AUT அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் வாயில் முழக்க போராட்டமும் அதைத் தொடந்து உள்ளிருப்பு போராட்டமும் செய்தனர். இது குறித்து தகவலறிந்த வக்பு கண்காணிப்பாளர் தாரீக் அவர்கள் இரவு 9 மணிக்கு நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து அனைத்து கோப்புகளிலும் கையொப்பம் இடுவதாக வக்பு அதிகாரி தாரிக் உறுதியளித்து இரவே அனைத்துக் கோப்புகளிலும் கையெழுத்திடதால் போரட்டம் கைவிடப்பட்டது. இரவு நேரம் வரை போராட்டம் தொடர்ந்ததால் கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

You Might Be Interested In

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter