Home » கம்பிகளை அறுத்து போட்ட அதிரை மின்வாரியம்! கெரண்ட் இல்லாமல் பரிதவிக்கும் அப்பாவிகள்!!

கம்பிகளை அறுத்து போட்ட அதிரை மின்வாரியம்! கெரண்ட் இல்லாமல் பரிதவிக்கும் அப்பாவிகள்!!

0 comment

அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணத்திற்காக இன்று காலை மின் தடை ஏற்படுத்தப்பட்டது. காலை 9மணி முதல் 5மணி வரை மின் தடை அமலில் இருக்கும் என சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருந்தன. ஆனால் அதில் குறிபிட்டப்படி 5மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் நோயாளிகள், சிறார்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பராமரிப்பு பணி என கூறி மின் தடை செய்யும் மின்வாரியம் சொன்ன கால அளவிற்குள் மீண்டும் மின் விநியோகத்தை துவங்காமல் காலம் தாழ்த்துவது தொடர் கதையாகி வருகிறது. திட்டமிடல், வேலை வாங்குதல் உள்ளிட்டவற்றில் இருக்கும் திறன் குறைபாடே இந்த அவலநிலைக்கு காரணம் என விவரம் அறிந்தவர்கள் குமுறுகின்றனர். இந்த விவகாரத்தில் மின் வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்த மாதமும் இதேநிலை தொடராமல் இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter