
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அதிராம்பட்டினம் கிளை சார்பில் மணிப்பூர் கலவரம் பொது சிவில் சட்டம் போன்ற மக்கள் விரோத செயல்களில் தம்மை முன்னிறுத்தி வரும் பாசிச பாஜக அரசை கண்டித்து பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர் கண்டன உரையாக மாநில பேச்சாளர் ஷேக் உமர் மற்றும் விசிகவின் சதா சிவக்குமார்,தாங்கல் அப்துல் காதர் கண்டன உரையாற்றினார்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷேக் உமர், மணிப்பூரில் குக்கி இன மக்களை குறிவைத்து 78 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் இன அழிப்பு கலவரத்தை மத்திய பாஜக அரசு ஒடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது எனவும், பெண்ணுரிமை என பிதற்றிகொள்ளும் ஒன்றிய அரசின் அடிவருடிகள் பெண்களை நிர்வாணப்படுத்தி கலவரம் செய்கின்றனர், இதனை ஒடுக்க வக்கற்ற பாரத பிரதமர் 78நாட்களுக்கு பின்னர் நீலி கண்ணிர் வடிப்பது விந்தையாக உள்ளதாக மாநில பேச்சாளர் சேக் உமர் தெரிவித்தார்,

மேலும் என் மண் என் மக்கள் என பாத யாத்திரை நடத்தும் பாஜகவினர் மணிப்பூரில் நடத்த தில் இருக்கா என கேள்வி எழுப்பினார்.
வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் INDIA கூட்டணிக்கு கிடைக்க வேண்டுமென்றால் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறை வாசிகளின் விடுதலை குறித்து முதல்வரின் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
விசிகவின் தஞ்சை மண்டல செயலாளர் சதாசிவன் பேசுகையில்,மணிப்பூர் கலவரம்.கார்பரேட் நடத்திய யுத்தம.என்றும், சமவெளி பகுதியில் பல்வேறு சமூகங்கள் வாழ்ந்து வருதாகவும், கனிம வளங்களை கொள்ளையடிக்க நடத்தப்படும் யுக்தி.என யெரிவித்தார்.
மாநில பேச்சாளர் தாங்கல் அப்துல் காதர் பேசுகையில், மத்திய மோடியர்சு இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானவரல்ல இந்திய மக்களுக்கே எதிரானவர்தான் தான் என்றார்.
இந்த சந்திப்பின் போது நகர IMMK தலைவர் ஜலீல்,செயலாளர் ஷேக்தாவூது உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
