அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தினகரன் அணியினர் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
ஆர்கேநகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ஆரம்ப சுற்றுகளில் இருந்தே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வெற்றி பெற்றார்.
தினகரின் வெற்றியை அவரது கட்சியினர் தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன்தொடரச்சியாக அதிரையிலும் தினகரன் அணியினர் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடித்து தினகரனின் வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.அதிரை நகர செயலாளர் ஜமால் முகமது,அம்மா பேரவை செயலாளர் முகமது,நகர பொருளாளர் ரபீக் அகமது, ஒன்றிய பாசறை பொருளாளர் ராஜ்குமார், ஒன்றிய இளைஞர் அணி துணை தலைவர் S.தமீம் அன்சாரி மற்றும் நகர தொண்டர்கள் கலந்துகொண்டனர்.