தஞ்சை தெற்கு மாவட்ட இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொதுக்குழு கூட்டம் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன் முன்னிலையில் தஞ்சை தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக மதுக்கூர் ஏ.எம்.அப்துல்காதர் நியமிக்கபட்டுள்ளார் மாவட்ட செயலாளராக எஸ்.எம்.ஜெய்னுல் ஆபிதீனும் பொருளாலராக நியாஸ் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளராக அதிரை எம்.ஆர். ஜமால் முஹம்மதுவும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக ஊடகவியலாளர் ஏ. ஷாகுல் ஹமீது தேர்வாகினார்.
முன்னதாக அதிராம்பட்டினம் நகர தலைவராக வழக்கறிஞர் முனாப், செயலாளராக வழக்கறிஞர் இ,சட். முஹம்மது தம்பியும், பொருளாளராக ஏ. ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர் தேசியத் தலைவர் பேராசிரியர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.. அபுபக்கர் அறிவித்தார்.
