அதிராம்பட்டினத்தில் மின் தடை , குறைந்த மின்சாரம் போன்ற பிரச்சனைகள் தொடர் வாடிக்கையாக உள்ளது. மாதம் ஒரு முறை பராமரிப்புக்காக மின் தடை செய்யப்படும், ஆனாலும் அறிவிக்கப்படாத மின் தடை கடந்த சமீப காலமாக நடந்துவருகிறது.
ஜூலை மாதம் பராமரிப்பிற்காக காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்தடை என அறிவித்துவிட்டு, இரவு 8 மணிக்கு மேல் தான் மின்சாரமே கிடைத்துள்ளது.
இதுபோன்ற பிரச்சனைகள் அதிரை மின் வாரியத்தில் தொடர் கதையாகிவருகிறது. மின்சாரம் கிடைத்தாலும் LOW VOLTAGE, மின் அழுத்தம், மின் இணைப்பிலிருந்து 220 வோல்ட் மின்சாரம் கிடைப்பதற்குப் பதில் வெறும் 180, 195 வோல்ட் மின்சாரம் மட்டுமே கிடைக்கின்றது. இதனால் மின்சாதனங்கள் பழுதாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
கோடை கால வெயில் மக்களை வாட்டியெடுத்த நிலையில் குறிப்பாக இரவு நேரங்களில் குறைந்த மின் அழுத்தம் இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து மூன்று மாதங்களாகவே பல முறை தமிழ்நாடு மின்சார வாரியம், தஞ்சை மண்டல மின்வாரிய பிரிவு, பட்டுகோட்டை AE , அதிராம்பட்டிணம் AE அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது தொடர்ச்சியாக தொடர்கிறதே தவிர தீர்வு கிடைக்கவில்லை.
இதனை மின்சாரத்துறை அமைச்சர் தலையிட்டு பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.நான் இச்செய்தியை எழுதிக்கொண்டு இருக்கும் போது கூட மின் வெட்டு ஏற்பட்டுள்ளது ரொம்ப வேதனையாக உள்ளது.( நேரம் 1.54 Am)