அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (06.08.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை காது, மூக்கு, தொண்டை சிகிச்சையில் 40 வருடம் பல மருத்துவ கல்லூரிகளிலும் பல மருத்துவ மனைகளிலும் மற்றும் பல்கலைகழக மருத்துவமனையில் பணி புரிந்தவர் காக்ளியார் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சையில் பயிற்சி மற்றும் அனுபவம் உள்ள மருத்துவர் முஹம்மது அன்வர் MS.DLO, D.A.C (HONG KONG) மற்றும் உதவிப் பேராசிரியர் உலக காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை மாநாடு, புனேவில் தங்கப்பதக்கம் பெற்ற மருத்துவர் முஹம்மது ரமலான் Ms (ENT) அவர்களும் வருகை தர உள்ளனர்
இந்த மருத்துவ முகாமில், காது, மூக்கு, தொண்டை, பரிசோதனைக்காக வரும் நோயாளிகளுக்கு காது, மூக்கு, தொண்டை, கழுத்தில் கட்டி,தைராய்டு நோய்களுக்கு,
மிகவும் குறைந்த செலவில், திருச்சி SRM மருத்துவமனையில் (ஆபரேஷன்) அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆறு வயதுக்கு உட்பட்ட காது கேட்காத, வாய்பேச முடியாத குழந்தைகளுக்கு ரூபாய் ஏழு லட்சம் மதிப்புள்ள காக்ளியார் இம்ப்ளான்ட் கருவி இலவசமாக பொருத்தப்படும் .
மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு:
செல்:63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)
குறிப்பு:
ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.


