பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை வருகிறார் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், வர்த்தகர் அணி துணைத் தலைவரும் பிரபல தொழிலதிபருமான பழஞ்சூர் செல்வத்தின் இல்ல திருமண விழா பட்டுக்கோட்டை S.R திருமண மஹாலில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைக்க உள்ளார். மேலும் இந்த திருமண விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் தலைமை கழகம், பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
அதனைத்தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பொற்கிழி வழங்கும் விழா பட்டுக்கோட்டை கோமள விலாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்கும் இவ்விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க உள்ளார். அமைச்சர் உதயநிதியின் பட்டுக்கோட்டை வருகையால் பட்டுக்கோட்டையில் திமுகவினர் முகாமிட்ட வண்ணம் உள்ளனர். அமைச்சர் உதயநிதியை வரவேற்பதற்கான ஏற்காடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
