திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பட்டுக்கோட்டையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
திமுக வர்த்தகர் அணியின் மாநில துணைத் தலைவர் பழஞ்சூர் செல்வத்தின் இல்ல திருமண விழா பட்டுக்கோட்டை S.R திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
அதனைத்தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்டுக்கோட்டை கோமள விலாஸ் மண்டபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு பொற்கிழி வழங்கும் விழாவில், திமுகவுக்காக உழைத்த கழக மூத்த முன்னோடிகள் 620 பேருக்கு தலா ரூ. 10,000 பொற்கிழியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கி சாதித்து வரும் மாணவ-மாணவியர் 50 பேருக்கு தலா ரூ. 10,000 உதவித்தொகையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இவ்விழாக்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் S.S. பழனிமாணிக்கம் MP, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா. அண்ணாதுரை MLA, தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் MLA, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் MLA, தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் T.K.G. நீலமேகம் MLA, திமுக மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் S.H. அஸ்லம், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.