சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆசிய கண்டத்தின் நிதி தலைநகராக சிங்கப்பூர் இருப்பதால், உலக நாடுகள் மத்தியில் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த தேர்தலில், இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் தொடர்ந்து முன்னிலை வகித்த வந்த நிலையில் தற்போது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தேர்தல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டான் கின் லியான் 13.88% வாக்குகளும், இங் கொக் சொங் 15.72% வாக்குகளும் பெற்று படுதோல்வி அடைந்தனர்.

சிங்கப்பூர் நாட்டின் அதிபராகப் பதவியேற்க உள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.