Home » குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேர் கைது!

குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேர் கைது!

0 comment

குவைத்தில் கபத் பகுதியில் இன்று கடுமையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனையில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேரை கைது செய்ததாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது. ஜஹ்ரா பாதுகாப்பு இயக்குநரகத்தின் பிரிகேடியர் ஜெனரல் சலே அல்-அஸ்மி, இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முஹம்மது அல்-இப்ராஹிம் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

200க்கும் மேற்பட்டோரின் ஆவணங்களை சரிபார்த்து குடியிருப்பு சட்டத்தை மீறியதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் தங்கள் ஸ்பான்சர்களிடமிருந்து தப்பி ஓடிய நபர்கள் எனவும், மற்றவர்கள் ஸ்பான்சர்களின் கீழ் வேலை செய்யாத வீட்டு வேலைக்காக வந்து சட்டவிரோதமாக வேலை செய்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் நாடு கடத்தல் சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Source – Kuwait tamil pasanga

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter