ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அதிரை கிளை சார்பில் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அதிரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாத காரணத்தால் பெண் நோயாளிகள் கற்பிணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதனை கண்டித்து ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பலமுறை உரிய இலாக்காவிற்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருப்பதை கவனத்தில் கொண்டு விரைவில் உள்ளிருப்பு போரட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து காவல்துறைக்கு அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாலவும், ஒருவார கால அவகாசத்திற்குள் நிரந்தர மகப்பேறு மருத்துவரை நியமிக்காவிட்டால் திட்டமிட்டபடி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போரட்டத்தை நடத்துவது என ஐமுமுக நகர தலைவர் ஜலீல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ASWA அமைப்பாளர் முகம்மது அப்பாஸ் கூறுகையில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி இருப்பதால் சாலை விபத்துக்களால் அதிகளவில் உயிர்ப்பலி ஏற்படுகின்றன என்றும் ஐமுமுகவின் நியாயமான கோரிக்கையை சுகாதாரத்துறை பரிசீலித்து நல்ல முடிவை எட்டும் என நம்புவதாக தெரிவித்தார்.



