Thursday, March 19, 2026

உட்கட்சி  பூசலால் தனித்து விடப்பட்ட அதிரை அம்பேத்கர் நகர் ! – 2வது வார்டு திமுக துணை செயலாளர் பகிரங்க  குற்றச்சாட்டு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் : வரி கட்டியும் வடிகால் வசதி செய்து தர மறுக்கும் நகராட்சி – உட்கட்சி பூசலால் தமக்கு  ஆண்டு ஒன்றுக்கு  6 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கடந்த 8 ஆண்டுகளாக இந்த இழப்பு ஏற்பட்டு வருவதாக திமுகவின் முன்னோடி ஒருவர்  கூறுகிறார்.

அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு எண் 2க்கு உட்பட்ட அம்பேத்கர் நகரை சார்ந்த அப்துல் ஜப்பார் திமுகவின் தீவிர பற்றாளரான இவர் 2வது வார்டில் துணை செயலாளராகவும் உள்ளார்

இவர் சார்ந்துள்ள பகுதியில் சாலை,வடிகால் வசதிகள் எதுவும் இல்லை என்றும் தாம் வசிக்கும் பகுதிக்கு வடிகால் சாலை வசதி கேட்டு பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என்கிறார்.

மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசலால் எங்கள் பகுதியை தொடர் புறக்கணிப்பு செய்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்.

நிலுவை இன்றி வரிகட்டும் எங்களை மாற்றாந்தாய் பிள்ளையாக நகராட்சி அதிகாரிகள் பார்க்கிறார்கள் என்றும், இந்நிலை தொடர்ந்தால்  எங்கள் பகுதிமக்களை ஒன்று திரட்டி ஜனநாயக வழியில் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறுகிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img