Home » அமெரிக்காவில் அதிரையர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார் – முஸ்லீம் என்பதால் தாக்கினேன் என கருப்பினத்தவர் போலிசிடம் ஒப்புதல் வாக்கு மூலம் !

அமெரிக்காவில் அதிரையர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார் – முஸ்லீம் என்பதால் தாக்கினேன் என கருப்பினத்தவர் போலிசிடம் ஒப்புதல் வாக்கு மூலம் !

by Admin
0 comment

அமெரிக்கா நியூயார்க் நகரில் வசிப்பவர் அலி அக்பர் இவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பணியை முடித்துவிட்டு திரும்பும் வழியில், ரயிலில் வந்த சக பயணி ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் அலி அக்பரின் தலையில் பலமாக குத்தியுள்ளார்.

இதனால் நிலை தடுமாறிய அலி அக்பரை சக பயணிகள் மீட்டு அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் குற்றவாளியை கைது செய்தனர் அப்போது அவன் அளித்த வாக்குமூலத்தில் அவர் ஒரு முஸ்லீமாக தெரிந்ததால் அவரை குத்தினேன் என தெரிவித்து இருக்கிறார்.

கடந்த பத்து நாட்களில் நியூயார்க் நகரில் மட்டும் 5க்கும் மேற்பட்ட இதுபோன்ற வழக்குகள் பதிவாகி உள்ளாதாக போலிசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter