பணி சூழல் காரணமாக பல நாடுகளிலும், பல ஊர்களிலும் பிரிந்துகிடக்கும் நமது சம்சுல் இஸ்லாம் சங்க உறவுகள், ஆண்டு தோறும் விடுமுறையை ஒட்டியும், தொடர்ந்து நடைபெறும் சொந்தங்கள், நண்பர்களின் இல்ல திருமண நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதற்காகவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிரையில் ஒன்றாக சங்கமிப்பது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் முஹல்லாவாசிகளின்ஒன்றுகூடல் நிகழ்வு வரும் 28 டிசம்பர் 2017 என்று காலை 11:00 மணி முதல் 12:30 மணி வரை சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தருணத்தை சரியான வாய்ப்பாக பயன்படுத்தி சென்னை உள்ளிட்ட வெளியூர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நண்பர்கள் ஊர் நலன், சமுதாய நலன், முஹல்லா நலன் சார்ந்த தங்கள் ஆலோசனைகளை உள்ளூரில் களத்தில் பணியாற்றும் நிர்வாகிகளிடம் முன் வைக்கலாம்.