பாலஸ்தீன மக்கள் மீது இரக்கமற்ற தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன நிலத்திற்கு ஒன்றிய அரசு துணை நிற்க வலியுறுத்தியும், பயங்கரவாத இஸ்ரேலிய அரசுக்கு ஒன்றிய அரசு துணை போகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அநீதிக்கெதிரான பேரமைப்பு சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாலை 4 மணியளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அநீதிக்கெதிரான பேரமைப்பின் சார்பில் ஹசன், வரவேற்புரை ஆற்றினார். அநீதிக்கெதிரான பேரமைப்பைச் சேர்ந்த பஷீர் தலைமை உரையாற்றினார். இதில் பிரபல இஸ்லாமிய பேச்சாளர் மௌலானா சம்சுதீன் காஸிமி கண்டன உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் அதிரையை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.