அதிரையில் வீதீகளில் சுற்றிதியும் மாடுகளால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது, இந்த விபத்தில் சிக்கியர்கள்,உயிரிழப்பு வரை செல்வதும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை பல்வேறு ததஜ உள்ளிட்ட சமுக அமைப்புகள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மாடுகளால் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்திக் அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஜமால் முகம்மத் என்பவர் உயிரிழந்தார்.
அதன்பின்னர் சுதாரித்து கொண்ட நகராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி விளம்பரம் மூலமாக முறையான அறிவிப்பை வெளியிட்டு இரண்டு நாட்கள் அவகாமும்.வழங்கியது.இதன் காரணமாக மாட்டை வளர்க்கும் நபர்கள் கையில் கயிறுடன் அலைந்தி திரிந்து தமது மாடுகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர் !
நகராட்சி செய்த கெடுபிடியால் அடங்காத சில மாடுகள் மட்டும் நகராட்சி எல்லையை தாண்டி தப்பி கொண்டது. நகராட்சி ஊழியர்கள் அழைந்து திரிந்து எல்லைக்குள் நடமாடிய அப்பாவி மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்து கண்டிசன்ன் பேரில் மீண்டும் ஒப்படைக்கபட்டது.
இருப்பில் சம்பவத்தண்று தப்பியோடிய சில மாடுகளுடன் ஜாமினில் வெளிவந்த சில மாடுகள் இன்றளவும் ECR சாலைகளில் சுற்றி திரிகிறது குறிப்பிடதக்க விஷயமாகும் !