தஞ்சையில் இன்று(27/12/2017) மாற்றுத்திரனாளிகளுக்கான அமைப்புகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதிரையை சேர்ந்த பலர் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பட்டுகோட்டை வட்டம் அதிரை சார்பில் சென்ற தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் உதவி தொகை பற்றியும் , ஆன்லைன் மூலம் சேவைகள் குறித்தும் , வேலைவாய்ப்புகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது குறித்தும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அதிரையில் மாற்றுத்திரனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடத்துவது குறித்தும் அதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
இதற்க்கு மாற்றுத்திரனாளிகளுக்கான மாவட்ட ஆட்சியர் மற்றும் மாற்றுத்திரனாளிகள் மறுவாழ்வு துறை அலுவளரும் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
கோரிக்கைகளின் முழு விபரம் புகைப்படத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது