Sunday, May 5, 2024

நகராட்சி தலைவரின் கணவர், துணை தலைவருக்கு குட்டு வைத்த நகராட்சி மண்டல இயக்குநர்! அர்டாவுக்கு பச்சை கொடி!!

Share post:

Date:

- Advertisement -

ARDA அமைப்பின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என நகராட்சி தலைவரின் கணவர், துணை தலைவர், நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து அதிரை நகராட்சி ஆணையருக்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அனுப்பியுள்ள உத்தரவில், “A. அஹமது இப்ராஹிம் (ARDA சங்கத்தின் பொருளாளர்) என்பவர் தமது சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் பொது மக்களின் நலன் கருதி மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கிய போது நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவரின் கணவர், துணை தலைவர் உள்ளிட்டவர்கள் இடையூறுகள் ஏற்படுத்துவதாகவும், மேற்படி இடையூறுகள் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடை பெறுவதற்கு இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் கோரியுள்ளார்.

இது தொடர்பாக பார்வை 2 இல் காணும் இவ்வலுவலக கடிதம் மூலமாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மணப்பாறை நகராட்சி நகரமைப்பு ஆய்வர்க்கு அறிவுறுத்தப்பட்டது தனியர் மேற்படி ஆய்வறிக்கையில் மேற்படி புல எண்ணில் கட்டிடம் கட்ட தடையில்லை என (மூ.மு.10819/2023/அ7 நாள் 05.09.2023) பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியரால் சான்றளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஏனவே மேற்காணும் விவரங்களின் அடிப்படையில், ARDA சங்கத்தின் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு, எவ்வித இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு நகர்மன்ற தலைவரின் கணவர், துணை தலைவர், மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளீட்டோருக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகின்றது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...