Friday, March 20, 2026

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா கொண்டாட்டம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வரும் கல்லூரி காதிர் முகைதீன் கல்லூரி.

இக்கல்லூரி எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட்ன் கீழ் இயங்கி வருகிறது.

இக்கல்லூரின் மூலம் பல சமூக அக்கறையுள்ள பெரியோர்களும், முக்கியஸ்தர்களும் நற் கல்வியின் மூலம் உருவாக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே..

இக்கல்லூரில் பல வருடங்களாக மீலாது நபி விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, நேற்று(27/12/2017) காலை சுமார் 11மணியளவில் மீலாது நபி விழா உத்தம நபியின் உதய தினவிழா என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட் மற்றும் அதன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜே.அபுல் ஹசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் ஏ. முகமது முகைதீன் அவர்கள் வரவேற்புரையாற்ற
இவ்விழாவில், மௌலவி. அல்ஹாபிழ்.S.ஸெய்யது அப்துற்றஹ்மான்.,MA(பாக்கவி,பாழில்,அஹ்சனி,முதல்வர் காயல்பட்டினம் அரபிக் கல்லூரி , காயல்பட்டினம்) அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

இவ்விழாவில் இறுதியில் கல்லூரியின் தமித்துறை தலைவர் அ. கலீல் ரஹ்மான் அவர்கள் நன்றிஉரையாற்றினார்.

இவ்விழாவில், ஓய்வு பெற்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ராஜாக், எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட் முன்னாள் செயலர் எஸ்.ஜே.முகமது அஸ்லம் மற்றம் எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட்ன் நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img