அதிராம்பட்டினம் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக மருத்துவ உதவிகள், அனாதை பிணங்களை அவரவர் மதம் சார்ந்த சடங்குகளை செய்து அடக்கம் செய்தல், ஆம்புலன்ஸ் சேவை, ஆக்சிஜன் சேவை என எண்ணிலடங்கா சேவைகளை ஐமுமுகவின் மருத்துவ அணியினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
அவ்வப்போது அனாதை பிணங்கள், மற்றும் ஆக்சிடெண்ட் பிணங்களை உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்படும் பிணங்களை பாதுகாக்ககும் இடம் மிகவும் அசுத்தமாக காட்சியளித்து உள்ளது.
இதனை அடுத்து களத்தில் இறங்கிய அவ்வமைப்பினர் அப்பகுதியை சுத்தம் செய்தனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஐமுமுகவின் இந்த மனித நேய செயலை வெகுவாக பாராட்டினர்.
![](https://i0.wp.com/www.adiraixpress.com/wp-content/uploads/2024/02/img-20240220-wa00176058443668121351155-609x1024.jpg?resize=609%2C1024&ssl=1)