மனிதநேய மக்கள் கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நேற்று வியாழக்கிழமை (22.02.2024) அன்று மாலை 5:00 மணி அளவில் மனிதநேய மக்கள் கட்சியின் 16ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நகர் முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் *கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழா மமக நகரத் தலைவர் H.செய்யது புகாரி தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நகர பொருளாளர் R.M நைனா முகமது ஏழைகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை நகரச் செயலாளர் S.முகமது அஸ்லாம் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் சதாம் என்பவர், SDPI கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் செயற்குழு உறுப்பினர் முனைவர் H.ஷேக் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பொறியாளர் இலியாஸ், இத்ரீஸ் அஹமத் மற்றும் மதுக்கூர் பேரூர் கழக தலைவர் ராசிக் அஹமத் கலந்து கொண்டனர். மேலும் நகர துணைத் தலைவர் *முகமது யூசுப் கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நகர துணை செயலாளர்கள் ஜகுபர் சாதிக், ஹாஜமுதீன், மற்றும் மனிதநேய தொழிலாளர் சங்கம் (ஆட்டோ), உறுப்பினர்கள் நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். இறுதியாக நகர துணைச் செயலாளர் சேக் நசுருதீன் நன்றியுரை ஆற்றினார். இதில் உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.