359
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும்பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 133 பேர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் எம்பி சிவசாமி உட்பட 66 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தருமபுரி மாவட்டத்திலும் 18 பேர் என மொத்தம் 133 பேர் நீக்கப்படவுள்ளனர்என்று தகவல் வெளியாகியுள்ளது