Sunday, May 5, 2024

CAA சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து  ஆர்ப்பாட்டம்..! அதிரையர்கள் பங்கேற்க அழைப்பு..!

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

2019 ஆண்டு நாடாளுமன்ற அவைகளில்  உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்திய போது இந்தியா முழுவதும் தொடர் சாஹீன்பாக் பாணியிலான போராட்டங்கள் வெடித்தன.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக போராட்டங்களை முடித்து கொண்டனர். பெரும்பாலான அரசியல் கட்சிகளின் அழுத்தங்களால் கிடப்பில் போடப்பட்ட சட்டமான சிஏஏவை தூசிதட்டி நேற்று மாலை அதிரடியாக நாடு முழுமைக்கும்  அமல்படுத்தியது ஒன்றிய அரசு.

இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், ஒரு நாட்டின் குடியுரிமை தொடர்பான முடிவை மாநில அரசாங்கங்கள் எடுக்க இயலாது என்ற போக்கில் செயல்பட்டுள்ள ஒன்றிய அரசின் கொடுங்கோல் தன்மையை முறியடிக்கும் விதமாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக மனித நேய ஜனநாயக கட்சியின் அதிராம்பட்டினம் கிளை இன்று 12.03.2024 மாலை 7மணியளவில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து போராட்டத்தை துவக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் அதன் பொறுப்பாளர்கள்  இந்த போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...