அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையர்கள் குடும்பத்துடன் இஸ்லாத்தின் புனிதமிக்க இடமான மக்காவில் வரலாற்று சம்பவங்கள் எடுத்துரைக்கும் இன்றளவும் சவுதி அரசால் பாதுகாத்துவரும் பல இடங்களை பார்வையிட ஜித்தாவில் வசிக்கும் அஜ்வா நெய்னா அவர்களுடைய பயண ஏற்பாட்டில் அதிரையை சேர்ந்த சிறுவர்கள் உட்பட 50 பேர் கொண்ட குழு மக்காவிற்கு பயணித்தனர். பல்வேறு சுவாரசியமும்,வரலாற்று இடங்களையும்,கண் முன் கொண்டு வந்த நிகழ்வை பயணம் மேற்கொண்ட அதிரையரகளுக்கு ஒரு புதிய அனுபவமாய் இருந்தாகவும்,வரலாறுகளை அறிந்து கொள்ள ஒரு பயனுள்ள சுற்றுலாவாகவும் இருந்ததாக விவரித்தனர். அப்துல்அஜீஸ் அவர்களின் மகன் அப்துல் பாஷித் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். வரலாற்று சிறப்பம்சங்களை கண்டுகளித்த மணித்துளிகள்: 11:45 ஹுதைபியா உடன்படிக்கை 12:45 லுஹர்,அஸர் தொழுகை 1:00 மதிய உணவு 2:30 அருங்காட்சியகம் 3:45 அரஃபா 4:30-5:40 வரலாற்று நிகழ்வுகளை பார்க்கப்பட்ட இடங்களுடன் இணைத்து மௌலானா ஜியாத் மக்கி அவர்கள் விவரமான விளக்கங்கள் கொடுத்து விளக்கப்படுத்தினார்.. இந்த ஜியாரத் பயணம் இறுதியாக மீராசா ரஃபியாவின் மகள் ஷபீனா மீராஷாவின் கிரா அத்தோடு இனிதே முடிவடைந்தது.
வரலாற்று பொக்கிஷங்களை பார்வையிட்ட அதிரையர்கள்!!!
169