Friday, April 17, 2026

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் இல்லை என்றும், அரசியலுக்கு வந்தால் ஏற்க முடியாது என்றும், அதனை தாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.

தமிழன் என ரஜினிகாந்த் ஏன் சொல்கிறார்? ஏன் இனம் மாறுகிறார்? என்று கேள்வி எழுப்பிய சீமான், மன்னராட்சி காலத்தில் மராட்டியர் படையெடுத்து வந்ததாகவும், தற்போது படமெடுத்து வருகின்றனர் என்றும் காட்டமாக தெரிவித்தார்.

ரஜினிகாந்த் வந்து ஆட்சி செய்தால் பிற மாநிலத்தவர்கள் காறித்துப்புவார்கள் என்று விமர்சித்த சீமான், ஒரே நாளில் கட்சியைத் தொடங்கி ஆட்சியை பிடிப்பதெல்லாம் இனி நடக்காது என்று கருத்து தெரிவித்தார்.

ஆன்மீக அரசியல் என்பது புதிய அரசியல் கருத்தாக இருப்பதாக கேலியாக தெரிவித்த அவர், அது எப்படிதான் இருக்கிறது என பார்ப்போமே என்று கிண்டலாக தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை திமுக வேட்பாளரிடம் அதிரை TIYA சங்கம் மனு: 6 முக்கிய...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்  (TIYA)...

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!

பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...
spot_imgspot_imgspot_imgspot_img