தஞ்சாவூர் ஶ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் சார்பில் அதிராம்பட்டினத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நேற்று 03/04/24 புதன்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், அதிரையைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள், சங்கங்களின் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் பங்கேற்றனர்.
இவ்விழாவில் ரமலானின் சிறப்பு குறித்து சைபுதீன் ஹஜ்ரத் சிறப்புரை ஆற்றினார். தஞ்சை ஶ்ரீ காமாட்சி மருத்துவமனையின் மருத்துவர் ஜியாவுர் ரஹ்மான் சிற்றுரை ஆற்றினார். இந்நிகழ்வில் காமாட்சி மருத்துவமனையின் மேலாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.