அரியானாவில் திருமண விழாவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆக்கியது.
அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் உள்ள குல்ஹா நகரை சேர்ந்தவர் விக்ரம்ஜீத் சிங் இவர் வெளிநாடு வாழ் இந்தியரான சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் திருமண வரேவற்பு நிகழ்ச்சி குல்ஹா நகரில் நடைபெற்றது. அப்போது மணமகனை சுற்றி வந்து உறவினர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நடன சுற்று முடியும் போதும் மணமகனின் உறவினர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு முறை வானத்தை நோக்கி சுட்டபோது திடீரென்று அவர் மீது ஒருவர் மோதினார். எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு குறி தவறி மணமகன் மீது பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமைனயில் கொண்டு சென்றனர். ஆனால் அவர் பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்..