அதிரை எக்ஸ்பிரஸ்::- உலகிலேயே அதிக வெப்பம் நிலவும் மிகப்பெரிய பாலைவனமான சகாராவை தற்போது பனி சூழ்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் உள்ள சகாரா பாலைவனத்தில் கடந்த 40 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அதிக பனிப்பொழிவு நிலவிவருகிறது. ஏறத்தாழ பாலைவனம் முழுவதையும் பனி சூழ்ந்துள்ளதால் வெண் போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. அவ்வப்போது அதிகரிக்கும் வெப்ப நிலையால் பாலைவனத்தை சூழ்ந்துள்ள பனி உருகும் சூழலும் நிலவிவருகிறது. புவி வெப்பமயமாதலையே இது காட்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.