இந்து மதத்தினர் புனிதமாக மதிக்கும் ஆண்டாள் என்பவரை கவிஞர் வைரமுத்து அவர்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகக் கூறி அதை பா.ஜ.க. தேசியச் செயலாளர் கண்டித்து பேசியுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
தங்களால் புனிதமாக மதிக்கப்படுபவரை யாரேனும் விமர்சனம் செய்தால் அதைக் கண்டிக்க உரிமை உண்டு.
ஆனால் இதைக் கண்டிக்கும் சாக்கில் நபிகள் நாயகத்தை உன்னால் பேச முடியுமா?, நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை உன்னால் பேச முடியுமா என்று இஸ்லாம் மார்க்கத்தை வம்புக்கு இழுத்துள்ளார்.
நபிகள் நாயகத்தையும் அவர்களின் குடும்பத்தினரையும் வம்புக்கிழுக்கும் வகையில் பேசிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், இனிமேல் ராஜா நபிகள் நாயகத்தை வம்புக்கு இழுத்தால் முஸ்லிம் சமுதாயம் கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டி வரும் என்று எச்சரிக்கவும் போராட்டம் நடத்த இயலும் மாவட்டங்கள் கண்டனப் போராட்டம் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்