தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வரும்
28-01-2018
மற்றும்
11-03-2018
(ஞாயிற்றுக்கிழமை) இரண்டு தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
அரசு மருத்துவமனைகள்,
அங்கன்வாடி மையங்கள்,
சத்துணவு மையங்கள்,
பள்ளிகள்,
ரயில் நிலையங்கள்
மற்றும்
முக்கியமான மையங்களில்
சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சொட்டு மருந்து வழங்கும் மையம்
காலை 7 மணி முதல்
மாலை 5 மணி வரை செயல்படும்.
நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
உங்கள் உற்றார்-உறவினர்கள்
மற்றும்
நண்பர்களிடம் சொல்லுங்கள்.
இந்த போலியோ முகாமில்
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் அவசியம்
“இரண்டு துளிகள் போலியோ சொட்டு மருந்தினை ”
கொடுக்க வேண்டும் என்று.
இந்த வாரத்திலோ
அல்லது
இந்த மாதத்திலோ
நீங்கள் உங்கள் குழந்தைக்கு
ஏற்கனவே போலியோ ஊசி போட்டிருந்தாலும் அவசியம்
இந்த சொட்டு மருந்தினை கொடுக்க வேண்டும்.
போலியோ இல்லாமல் இந்தியாவை பாதுகாத்திட தவறாமல் “போலியோ சொட்டு மருந்தினை ” கொடுக்கவும்.
குழந்தைகளே ஒரு நாட்டின் எதிர்காலம் –
அவர்களின் மகிழ்ச்சியான எதிர்கால வாழ்க்கைக்கு கொடுப்பீர்
இரண்டு சொட்டு ”
போலியோ சொட்டு மருந்தினை”.
ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தவறாமல்
சொட்டு மருந்து கொடுத்து
“போலியோ ” என்னும் அரக்கனை ஒழிப்போம்.
போலியோ மீண்டும் வராமல் பாதுகாப்போம்.
போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் .
ROTARY CLUB OF PATTUKKOTTAl