அதிரை சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம், பொருளாளர் எம்.முத்துக்குமரன், துணை செயலாளர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது,தணிக்கையாளர்என்.ஷேக்தம்பி, விதை அறக்கட்டளை நிறுவனர் சக்திகாந்த் ஆகியோர் ஆத்திக்கோட்டை மேலக்காடு கிராமத்தில் உள்ள அருள்மிகு முருகன் கோவில் தோட்டத்தில் கிராம மக்களால் வளர்க்கப்பட்டு வரும் புனித காடுகளை பார்வையிட்டனர்.
ஆதிபராசக்தி வாரவழிபாட்டுமன்றத்தின் மாவட்ட தலைவர்.செம்பாளூர்.வை.முத்துவேல் மற்றும் வெற்றி ஆகியோர் அங்கு வளர்க்கப்படும் செம்மரம், வேம்பு, வேங்கை ஆகிய மரங்களையும் முருகன் கோவிலில் உள்ள மருத்துவ குணம் நிறைந்த இருநூறு ஆண்டுகள் வயதுள்ள உதிர வேங்கைமரம் மேலும் அப்பகுதியில் காணப்படும் தும்பை , கவிழ்தும்பை, மூக்கிரட்டை , ஆதண்டை, நன்னாரி, விஷ்ணுகிரந்தி, துளசி,பழம்பாசி போன்ற மூலிகைகளைப்பற்றியும் விளக்கமளித்தனர்.
மழை நீர் சேமிப்பிற்காக வெட்டப்பட்ட குளத்தையும் சுற்றுச்சூழல் மன்றத்தினர் பார்வையிட்டனர்.
அடிக்கடி இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டு விபரங்களை சேகரித்து பொதுமக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது