அதிரை எக்ஸ்பிரஸ்:- தலைப்பிலே எல்லாவித பதில்களும் கிடைத்திவிடும்.காவல்நிலையம் இல்லாத ஊர்களில் கூட பாதுகாப்போடும்,பயமின்றியும் பயணமாக கூடிய சூழ்நிலைகளையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
அப்படியிருக்கையில் அதிரைக்கு காவல்நிலையம் இருப்பது மக்கள் இன்னும் பாதுகாப்பையும்,சுதந்திர நடமாட்டத்தையும் உணர்ந்து விடலாம் என்பதற்கே ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது.
அண்மை காலமாக அதிரையில் பலவகையான திருட்டு சம்பவங்கள் என ஒருவித அச்ச உணர்வுடனே பொதுமக்கள் இருக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.இந்த அச்ச உணர்வை போக்க எந்தவொரு காவல்துறை அதிகாரியும் பொதுமக்களுக்கு இனி எந்தவொரு திருட்டு சம்பவங்களும் நடைபெறாது என்பதை அவர்களால் விளக்கப்படுத்தக்கூட முடியவில்லை.
பொதுமக்களும்,பொருட்களை திருடர்களிடம் பறி கொடுத்துள்ளவர்களும் நம்மிடம் கூறுகையில் காவல்துறை தொடர்ந்து கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.இதனால் அதிரையில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களுக்கும் காவல்துறைக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகவும் நம் முன் தெரிவிக்கின்றனர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பயன்படுத்தும் காவல்துறையினரிடமே சட்டம் ஒழுங்கு பாதிப்பு வருவதென்றால் என்ன செய்வது,அதிரையில் கள்ள சந்தையில் 24 மணிநேரமும் அமோக மதுவிற்பனை பேருந்து நிலையம் அருகே அதாவது காவல்நிலையத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள பழைய மதுபானக் கடையில் இன்றுவரை விற்பனை நடைபெறுகிறதே? இதைக்கண்டித்து தமுமுக பலமுறை புகார் கொடுத்தும் அதன் நிலை இன்று என்ன?
இப்படி ஒவ்வொன்றாக அடுக்கி கொண்டே போகலாம்.அதிரை காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஒரு விளக்கத்தை கொடுக்கவேண்டும்,இதுவரை நடந்த திருட்டு சம்பவங்களின் நிலை என்ன? என்பதை தெளிவாக….