Wednesday, March 18, 2026

மேலத்தெருவில் 2மாதங்கள் ஆகியும் சரி செய்யப் படாத குடிநீர் குழாய்.!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட  மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி 5 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து வைக்கும் கொள்ளவை கொண்டவை. தினமும் மிலாரிக்காடு பகுதியிலிருந்து பெறப்படும் குடிநீர் இந்த நீர்தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு மறுநாள் காலையில் மேலத்தெரு, கீழத்தெரு, வெற்றிலைக்காரத்தெரு, காட்டுப்பள்ளி தெரு, காலியார் தெரு, நடுத்தெரு ஒரு பகுதி, கடற்கரைத்தெரு, ஹாஜா நகர், புதுத்தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மேலத்தெரு 16 வது வார்டு பகுதியில் நீர்தேக்க தொட்டிக்கு வரும் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அதன் அருகே அமைந்துள்ள வடிகாலில் குடியிருப்பு கழிவுநீர் செல்வதால், பிரதான குழாயில் கழிவு நீர் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கலக்கமடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது;
‘கடந்த 4 மாதங்களாக இப்பிரச்சனை இப்பகுதியில் இருந்து வருகிறது. வடிகாலில் செல்லும் குடியிருப்பு கழிவுநீர் நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் உடைந்துபோன பிரதான குழாயில் கலந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி பலரை தாக்கியது.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பேரூராட்சி பணியாளர்கள் உடைந்தபோன பிரதான குழாயை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், அடுத்து சில தினங்களில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, முன்பு இருந்ததைவீட தற்போது அதிகமாக குடிநீர் வெளியேறி வீணாகிறது. மீண்டும் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் கலக்கமடைந்துள்ளோம்.  சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்’ என்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img