Tuesday, February 3, 2026

த.மா.கா.வை கலைத்துவிட்டு ரஜினி கட்சியில் சேர ஜி.கே.வாசனுக்கு டெல்லி நெருக்கடி?

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கு ஆள் பிடித்துவிடுவதில் ‘பிள்ளை பிடிக்கும்’ கும்பலைப் போல டெல்லி படுதீவிரமாக இருந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு ரஜினி கட்சியில் இணைந்துவிடுங்கள் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கடும் நெருக்கடி தருகிறதாம் டெல்லி.

காங்கிரஸ் கட்சியில் ராகுலுடன் மோதி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் ஜி.கே.வாசன். என்னதான் காங்கிரஸ் பாரம்பரியம் என கூறிக் கொண்டாலும் டெல்லிக்கு மிக நெருக்கமான பெரும் தொழிலதிபரின் கண்ணசைவில்தான் தமாகாவின் முடிவுகள் இருந்து வருகின்றன.

இதனால்தான் தேர்தல்களின் போது பாஜக பக்கம் தமாகா காற்று வீசுகிறது என செய்திகள் வெளியாகும். இந்நிலையில் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்துள்ளது டெல்லி.

அதிருப்தியாளர்களுக்கு வலை

ரஜினியின் புதிய கட்சிக்கு பிரமுகர்களை சேர்த்துவிடுவதில்தான் இப்போது டெல்லி படுபிசியாக இருக்கிறதாம். ஒவ்வொரு கட்சியிலும் தலைமையுடன் அதிருப்தியில் இருப்பவர்கள், சொத்துகளை வாங்கி குவித்திருப்பவர்கள், வழக்குகளில் சிக்கியிருப்பவர்களாக கணக்கெடுத்து மிரட்டி ரஜினிகாந்த் பக்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது டெல்லி.

வாசனுக்கு நெருக்கடி

அதேபோல் சிறு சிறு கட்சிகளையும் ரஜினி கட்சியில் இணைப்பதற்கான பேரங்களையும் டெல்லி முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக டெல்லிக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலமாக தமாகாவை கலைத்துவிட்டு ரஜினி கட்சியில் இணைந்துவிடுங்கள்; அது ரஜினிக்கும் உங்களுக்கும் பெரிய பலமாக இருக்கும் என ஜி.கே.வாசனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாம்.

ஜிகே வாசன் ஆலோசனை

அப்படி செய்யும்போது 1996-ம் ஆண்டு ரஜினி- மூப்பனார்; இப்போது ரஜினி- மூப்பனார் மகன் வாசன் என்கிற இமேஜ் உருவாகும். இது ரஜினிகாந்துக்கு புதிய அடையாளத்தை தரும் என நம்புகிறதாம் டெல்லி. இது தொடர்பாக கட்சியினருடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

விழிபிதுங்கும் வாசன்

ஆனால் பெரும்பாலான நிர்வாகிகள் கட்சியை கலைக்கும் முடிவுக்கு விருப்பம் தெரிவிக்காமல் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனராம். டெல்லியின் நெருக்கடிக்கு பணிவதா? அல்லது நம்பி வந்த கட்சியினர் முடிவுக்கு கட்டுப்படுவதா? என தெரியாமல் விழிபிதுங்கியிருக்கிறாராம் வாசன்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img